சனி, 22 ஏப்ரல், 2017

நயன்தாரா.....

















நயன்தாரா
பிரம்மன்
உனை
வரைந்தாரா......

செரிப்பழமே.....














ஐஸ்கிரீம்
மீது வைத்த
செரிப்பழமே.....

மேகங்களே......


















ஓரிடத்தில் நில்லாமல்
ஓடியாடும் மேகங்களே
யாரிடத்தில் சேதிசொல்ல
யவ்வண்ணமாய் போறீங்களோ....

நின்றாடும் மயில் தோகை
நிழல்போல ஓடுறீங்களே
வானத்து வீதியிலே
சிக்னலு வைக்கலையா......

தடுத்து நிறுத்த
டிராபிக் போலீஸ்
குறுக்கால நிக்கலையா...

ஹெல்மெட்டு போட சொல்லி
உங்கள்ட்ட யாரும்
சொல்லலையா...

தடையில்லாம  போறீங்களே
தண்டனை
ஏதும் விதிக்கலையா....

ஆக்சிடன்ட் இல்லாம
அழகாதான் போறீங்களே
கத்த வித்த கதை கொஞ்சம்
சொல்லுங்களேன்...

பாரா முகம் எதற்கு......


















வேரா இருந்தவளே -எனக்கு
வெற்றிக்கனி தந்தவளே
பாரா முகம் எதற்கு-என்மேல்
பண்பற்று போனவளே

ஊற்றெடுத்த நீராய்-எனைநோக்கி
உழன்றோடி வந்தவளே
நீயின்றி நான் இங்கு
நீரற்ற நிலமானேன்

எப்படியோ நான் உனக்கு
வேற்று கிரக வாசியானேன்
மாற்று வழி சொல்லிடுவாய் -என்
மாசற்ற குலவிளக்கே

நீயும், நானுமாய்
காசற்ற உலகில் வாழ....

மீண்டும் கைகோர்த்து நின்றிடுவோம்
வேண்டும் நீ எனக்கு மங்காத வான் விளக்கே

வினாடியை வீணடிக்காமல்
விரைந்து நீ வந்துவிட்டால்
நாம் இணைந்து காலத்தை வென்றிடுவோம்

கவிதையென இருக்கும் இவ்வுலகில்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்...


நீதானே.....



















கள்ளம் கபடமற்ற
கை குழந்தை நீதானே
உள்ளம் நிறைந்தவளே
உதிரமும் நீதானே

பாதியிலே வந்தாலும்
பாசமழை பொழிந்தவளே-என்
மீதி வாழ்க்கைதனை
மீட்டெடுத்துக் கொண்டவளே

தேவதைபோல் வந்து நின்றவளே-என்
தேகத்தை பங்கு கொண்டவளே

அழகு














முகம் மட்டுமா அழகு-உன்
முடி கூடதான் அழகு
நிறம் மட்டுமா அழகு-உன்
நிழல் கூடத்தான் அழகு

சிரிப்பு மட்டுமா அழகு-உன்
சினம் கூடத்தான் அழகு
குரல் மட்டுமா அழகு-கன்ன
குழிக்கூடத்தான் அழகு